பணக்கார காதலன்
உண்மைக் கதை பணக்கார காதலன்❣️ உண்மை கதை என்பதால் உண்மையான பெயரை வெளியிடாமல் வேறு பெயர் மாற்றி கதையை எழுதுகிறேன்.... ஆதி இவர்தான் கதையின் ஹீரோ பார்க்க அழகா தான் இருப்பான்.. ஆங்கிலம் சிங்களம் தமிழ் மூன்றிலும் நன்றாகப் பேசுவான் ..பிறந்தது கொழும்பில்... குடும்பம் வசதியானவர்கள்.. கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. யுனிவர்சிட்டியில் சில நண்பர்களுடன் பிரச்சினை என்பதால் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டில் குடிபெயர்ந்தான்.. வீட்டின் உரிமையாளர் மகள் கீர்த்தனா. பள்ளிப் படிப்பை முடிச்சிட்டா அம்மா அப்பா அவளுக்கு ஒரு தங்கை..சிறிய குடும்பம். அவங்க அப்பாவும் குறைந்த சம்பள வேலை தான் செய்து கொண்டிருந்தார்.. ஆதிக்கும் சமைத்துக் கொடுத்தார் அவளின் அம்மா... ஆதியும் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று சாப்பாடு எடுத்து வருவது வழக்கம்.. ஆதிக்கும் கீர்த்தனாவை பிடித்திருந்தது.. மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது..ஆரம்பத்தில் தயக்க பட்டாலும் பின்னர் பேச ஆரம்பித்திருக்கிறாள்.. வீட...